எனக்கு பேட் மேன் என்று கூறினாலும் பரவாயில்லை. பெண்களின் ஆரோக்கியத் துவாய் சுகாதார பிரச்சினைக்கு நிலையான தீர்வை இப்போதேனும் வழங்குங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

பெண்களின் ஆரோக்கியத் துவாய் சுகாதாரம், சமூக ஆரோக்கியம் குறித்த கலந்துரையாடல் மிகவும் உயர் மட்டத்தில் இருந்து வருகின்றன. எமது நாட்டின் சனத்தொகையில், 11 மில்லியன் பெண்கள் ஆவர். அவர்களில் சுமார் 2.5 மில்லியன் பேர் மாதாந்த நிதி செயல்முறையை எதிர்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இறக்குமதி செய்யப்படும் ஆரோக்கியத் துவாய் மீதான அதிக வரி, உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியத் துவாய் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களின் மீதான வரி என்பன அதிகரிக்கப்பட்டுள்ளதால், இவை விலையுயர்ந்த ஆடம்பரப் பொருளாக மாற்றியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஒரு குடும்பத்தின் மாத வருமானத்தில் சுமார் 3.5% ஆரோக்கியத் துவாய்களுக்காக செலவிடப்படுகிறது. ஆரோக்கியத் துவாய்களின் விலைகள் அதிகம் என்பதால், குறைந்தபட்ச வாழ்க்கைத் தரம் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்கள் ஆரோக்கியமற்ற முறைகளை இதற்காக பயன்படுத்துவதை நிறுத்தி, பொருளாதார வறுமையை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறான மோசமான சுகாதார பயன்பாட்டினால் சிறுநீரக தொற்று மற்றும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நிலைமைகள் ஏற்படுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

இறக்குமதி செய்யப்படும் ஆரோக்கியத் துவாய்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டதால் அவற்றின் விலை அதிகரித்துள்ளன. ஆரோக்கியத் துவாய்களுக்கு விதிக்கப்பட்ட வரியை நீக்குவது எப்போது?

பெண்களுக்கு இலவச ஆரோக்கியத் துவாய் வழங்குவதை ஐக்கிய மக்கள் சக்தி கொள்கையாகக் கருதினாலும், தற்போதைய அரசாங்கம், 2019 ஜனாதிபதித் தேர்தலின் போது அதனை கேலி செய்து, நற்பெயருக்கு  கலங்கம் விளைவித்து,சேறு பூசும் விதமாக பேசினாலும் இன்று அது பாரியதொரு பிரச்சினையாக மாறியிருக்கிறது. எனவே இதற்குத் தீர்வு வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(19)  பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நிலையியற் கட்டளை 27(2)இன் கீழ் ஆரோக்கியத் துவாய் விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் இன்று(19) கேள்வி எழுப்பும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பான பாடங்கள் தடைசெய்யப்பட்ட பாடமாக இனுமேலும் இருக்கக்கூடாது. சமூகத்தில் இது தொடர்பான ஒரு உரையாடலை உருவாக்க வேண்டும். கல்வி பாடத்திட்டத்திலும் இவ விவகாரம் உள்ளடக்கப்பட வேண்டும். சமூகத்திலும் இது குறித்த விடயதானங்களை பேசுபொருளாக்க வேண்டும். இது ஒரு மனிதாபிமானப் பிரச்சினை என்பதால், இது குறித்து வெளிப்படையாகப் பேசி, நிலையான தீர்வைக் காண வேண்டும். அபிவிருத்தியடைந்த முற்போக்கு சமூகங்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வுகளைக் கொண்டிருந்தாலும் வளர்முக நாடிகளிலுள்ள சமூகங்கள் இவ்வாறான பிரச்சினைகளுக்கு முட்டாள்தனமான தீர்வுகளை முன்வைத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் ஆரோக்கியத் துவாய்களுக்கு 40% வரி செலுத்த வேண்டியுள்ளது. VAT,PAL, SSCL மற்றும் Cess போன்ற 4 வரிகள் உள்ளன. 15 முதல் 49 வயதுடைய பெண்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கு உகந்த தீர்வு வழங்கப்பட வேண்டும். Selyn அறக்கட்டளை இந்த பிரச்சினைக்கு ஒரு சிறந்த ஆய்வை முன்னெடுத்து ஒரு நிலையான தீர்வையும் எட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.