எல்லையற்ற அதிகார பேராசை கொண்ட பல்வேறு தரப்பினர் பெரும் செல்வத்தை செலவழித்து அதிகாரத்தை பெற முயற்சிக்கும் நேரத்தில் இலங்கையின் 76 வருட ஜனநாயக வரலாற்றில் அதிகாரம் இன்றி நாட்டிற்கு சேவையாற்றிய ஒரேயொரு எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தி என வரலாறு படைத்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் இன்னும் பல பணிகளைச் செய்ய முடியும் என்று நம்புகிறது, ஆனால் அதிகாரத்திற்கு வருவதற்கு முழு நிதி பலத்தைப் பயன்படுத்தாமல், ஸ்மார்ட் குடிமக்கள், ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற தூய நோக்கத்துடன் எமது கட்சி செயல்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எனவே, வாக்களிக்கும் போது இரு முறை யோசித்து வாக்களியுங்கள். கூறுவதெற்கெல்லாம் கைதட்டாதீர்கள்.
இவ்வாறு யோசித்து பார்க்காது வெறும் வாய்ச் சொல் வீரர்களுக்கு நாட்டை ஒப்படைத்ததாலயே நாடு இன்று வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 127 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்
மாத்தறை, அக்குரஸ்ஸ, மாலிம்பட, ஹொரகொட மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மார்ச் 17 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில், கல்லூரியின் நடனம் மற்றும் அரங்கேற்றங்கள் குழுவினருக்குத் தேவையான ஆடைகளை பெறுவதற்குத் தேவையான ஒரு இலட்சம் ரூபா நிதியையும் நன்கொடையாக வழங்கி வைத்தார்.
இப்பாடசாலை மாணவர்கள் சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இதன்போது அதிபர் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் தெரிவித்த போது, அது தொடர்பான செலவின மதிப்பீடுகளை தயாரித்து சமர்ப்பிக்குமாறும், அதன்பிறகு இதற்கான நிதி உதவி வழங்கப்பட்டு குடிநீர் திட்டத்தை ஆரம்பித்து தருவாகவும் வாக்குறுதியளித்தார்.
இந்நாட்டில் வசதியானோருக்கான கல்வி மற்றும் வசதியற்றோருக்கான கல்வி என 2 பகுதிகளாக ஏற்றத்தாழ்வை சந்தித்துள்ளது. சில கிராமப்புற பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் வசதிகளைக் கூட ஏற்படுத்திக் கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது. தலைநகர் உயர் பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினைகள் இல்லையென்றாலும் கிராமப்புற பாடசாலைகளில் இவ்வாறான பிரச்சினைகள் கூட காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் தாகத்தால் அவதிப்பட்டால் அதுவும் மனித உரிமை மீறலாகும்.பாடசாலை கற்றல் செயற்பாடுகளுக்குத் தேவையான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும். இந்த வசதிகள் வழங்கப்படாவிட்டால் அது மனித உரிமை மீறலாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
சிங்களம் மட்டும், தமிழ் மட்டும் என்று சொல்லி இலங்கையை முதலிடத்திற்கு கொண்டு வர முடியாது.இவ்வாறு கோஷம் எழுப்புபவர்கள் காட்போர்ட் தேசபற்றாளர்கள். சிங்களம் மட்டும் தமிழ் மட்டும் என கூறிக் கொண்டு குறுகிய சிந்தனைகளில் இருந்து கொண்டு உலகை எம்மால் வெற்றி கொள்ள முடியாது. மக்கள் மனங்களில் ஊசலாட்டங்களை ஏற்படுத்தி, தவறான தூண்டுதல்களை ஏற்படுத்தி, தேசிய ஒற்றுமையை சீர்குலைத்து, நாட்டை சீரழிக்கும் போலி தேசபற்றாளர்களை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். எமது 41 இலட்சம் பாடசாலை மாணவர்கள் ஆங்கில மொழியில் சரளமாக தேர்ச்சி பெற்று புதிய தொழில்நுட்பத்துடன் உலகின் முதல் ஸ்தானத்திற்கு செல்வதற்கு உண்மையான தேசப்பற்று அவசியமான வழியாகும், இவ்வாறான முற்போக்கு ரீதியான பயணங்களுக்கு தடைகளை ஏற்படுத்துபவர்களே போலியான தேசப்பற்றாளர்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
மலட்டுக் கொத்து, மலட்டு அறுவை சிகிச்சைகள் போன்ற பொய்யான விடயங்களை கூறி,மக்கள் ஏமாற்றி திருடர்களுக்கு மக்கள் ஆணை சென்றதாலையே நாடு வங்குரோத்தாகி, 220 இலட்சம் பேரும் நிர்க்கதியான சூழலை சந்தித்து இருக்கும் நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி தற்காலிக பொறுப்பாளர்களாக நாட்டை கட்டியெழுப்பும் பயணத்திற்கு இயலுமான ஒத்துழைப்பை நல்க தயாராக உள்ளது. இதன் ஓர் அங்கமாகவே இந்த பிரபஞ்சம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இனம், மதம், சாதி, வர்க்கம், கட்சி பேதமின்றி அனைவரையும் இதில் ஒன்றிணையுமாறும், 41 இலட்சம் பாடசாலை மாணவர்களின் முன்னேற்றத்திற்கு எம்மாலான கூடிய பக்க பலத்தை வழங்க வேண்டுமென்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.