(ஹஸ்பர் ஏ.எச்) கிண்ணியா தம்பலகாமம் பிரதான வீதியின் தம்பலகாமத்துக்கு அடுத்ததாக காணப்படும் வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக வைக்கப்பட்ட கிண்ணியா எனும் பெயர் பலகையை பல மாதங்களாக காணவில்லை .சிவத்தப்பாலத்தடியில் நடப்பட்டிருந்த குறித்த பெயர்ப் பலகை இன்மையால் கிண்ணியா எனும் பிரதேச செயலகப் பகுதியை எடுத்துக்காட்டும் பெயர் இன்மையால் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கின்றனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக நடப்பட்ட குறித்த பெயர் பலகை பல மாத காலமாக காணாமல் போயுள்ளது இது தொடர்பில் உரிய சபை இது வரைக்கும் அதனை மீண்டும் நட நடவடிக்கை எடுக்கத் தவறியமை ஏனோ தெரியவில்லை இது தவிர புதிதாக அமைக்கப்பட்ட பல காபட் வீதிகளுக்கான முறையான பெயர் பலகையும் அமைக்கப்படவில்லை இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் பாதசாரிகள் வீதியை தேடியும் அங்கும் இங்கும் அலைகின்றனர். எனவே இது தொடர்பில் உரிய சபை நடவடிக்கை எடுத்து வீதிகளுக்கான பெயர் பலகைகளை நடுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.