(ஹஸ்பர் ஏ.எச் ) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும் பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு கலை, இலக்கிய நிகழ்வு ஜமாலியா சனசமூக நிலையத்தின் அனுசரணையில் 16.03.2024 (சனிக்கிழமை) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வு, வாசகர் வட்டத்தின் தலைவர் சரவணபஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ. இராஜசேகர், சிறப்பு விருந்தினராக சனசமூக உத்தியோகத்தர் எஸ். முரளிதரன் கௌரவ விருந்தினர்களாக ஜமாலியா சனசமூக நிலையத்தின் தலைவர் என்.நூர் மொஹமட், செயலாளர் மு.மு.முஹமட் முக்தார் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில், திருகோணமலை நகராட்சி மன்றத்தின் பெண் சுத்திகரிப்பு தொழிலாளிகள் சான்றிதழ் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
கவிஞர் கலாநிதி செ.ஞானராசா தலைமையில் இடம்பெற்ற கவியரங்கில், கவிஞர்களான கொட்டிய ஆரன், திருமதி ஜெயசிறி சிறிசெல்வம், டி.இரவிகாந்தன், செல்வி பாத்திமா தாஹிரா முஹம்மது சித்தீக் ஆகியோர் கலந்து கொண்டு ‘நிகரென்று கொட்டு முரசு’ என்ற தலைப்பில் கவிபாடியிருந்தனர்.
இந்நிகழ்வினை வாசகர் வட்டத்தின் ஆலோசகரும் நூலக உதவியாளருமான அ.அச்சுதன் தொகுத்து வழங்கியிருந்ததுடன், வரவேற்புரையை நூலகர் மு.லெ.றிம்சானா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் பிரதம நூலகர் ந. யோகேஸ்வரன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்விற்கு, அரங்கு நிறைந்த பார்வையாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.