(வாஸ் கூஞ்ஞ) மன்.பேசாலை சென் பத்திமா மத்திய மகா வித்தியாலயத்தின் வருடாந்த மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இப்பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ தலைமையில் இடம்பெற்றது.
வியாழக்கிழமை (14) நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கனகேஸ்வரன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
விஷேட அதிதியாக பேசாலை பங்குத் தந்தை அருட்பணி எஸ்.அன்ரன் அடிகளாரும் கௌரவ விருந்தினர்களாக மன்னார் கல்வி பிரதிப் பணிப்பாளர் பி.ஞானராஜ் , கல்வி திணைக்களம் சார்ந்த அதிகாரிகள் எஸ்.நவநீதன் , திருமதி பயஸ் றதி பீரிஸ் , முன்னாள் உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எம்.ஏ.ஜே.துரம் , பிரான்ஸ் வர்த்தகர் சீ.சம்சன் மற்றும் புனித வெற்றிநாயகி ஆலய பரிபாலன சபை செயலாளர் சீ.மெக்லஸ் பெர்னாண்டோ ஆகியோர் கலந்து கொண்டனர்.