( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மடு பொலிஸ் பிரிவில் வாழ்வாதாரத்துக்காக தொழில் செய்ய வந்த பெண்மணியை யானை மிதித்து மரணத்தை தழுவிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவம் செவ்வாய் கிழமை (12) இரவு இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மரண விசாரணையின் மூலம் தெரிய வருவதாவது
வவுனியாவில் வசித்து வந்த குடும்பம் ஒன்று கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு மன்னார் மடு பிரதேச பகுதி கட்டையடம்பன் பகுதிக்கு தொழில் நிமித்தம் வந்துள்ளனர்.
இவர்கள் தங்கள் நண்பன் ஒருவரின் காணியில் தோட்டம் செய்து வந்துள்ளனர். சம்பவம் அன்று இரவு வீட்டின் வளவுக்குள் சத்தம் கேட்டதும் இவர்கள் எழும்பி பார்த்தபோது யானை ஒன்று வளவுக்கள் நின்றதைக் கவனித்துள்ளனர்.
இந்த யானை யன்னல் அறுகே வந்து மோப்பம் பிடிக்க ஆரம்பித்துள்ளது. இவர்கள் ஒரு குழந்தையுடன் இருந்தமையால் வீட்டை விட்டு வெளியேற முற்பட்டுள்ளனர்.
உடனே இவர்கள் அறையிலிருந்து வெளியேறுவதற்கு அவர்களின் வீட்டில் இரண்டு பாதைகள் காணப்படுவதாகவும் அதில் ஒன்று வெளிச்சம் உள்ள பாதையும் மற்றது இருட்டுள்ள பாதையுமாக இருந்ததாகவும்
இவர்கள் இருட்டுள்ள பாதையினால் குடும்பமாக வெளியேறியுள்ளனர்.
அப்பொழுது மரணித்த இந்த குடும்ப பெண் கே டபிள்யூ ஆராச்சி வியன்சேலாக்கே கயனி மதுவயந்தி குமாரி (வயது 29) பாதையில் தடுக்குப்பட்டு வீழ்ந்ததும் இருட்டுக்குள் நின்ற யானை இவளின் மேல் மிதித்தே மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.