மன்னார் சதொச மனித புதைகுழி வழக்கில் சட்டவைத்திய அதிகாரிக்கு அழைப்பானை

49747079 - a gavel and a name plate with the engraving judgment

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் சதொச மனித புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் சரியான விபரங்கள் அடங்கிய அறிக்கைள் மன்றில் சமர்பிக்கப்படாமையால் இவ் அகழ்வு பணிக்கு பொறுப்பு வாய்ந்த சட்ட வைத்திய அதிகாரிக்கு மன்றில் ஆஜராகும்படி கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மன்னார் தீவு நுழை வாயில் பகுதியில் 2018 ஆம் ஆண்டு சதொச விற்பனை நிலையத்துக்கான கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொண்டபோது மனித எச்சங்கள் காணப்பட்டன.

இதைத் தொடர்ந்து இதற்கான கட்டிட வேலை இடை நிறுத்தப்பட்டு மனித எச்சங்களின் அகழ்வுக்கான நடவடிக்கை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதிகளின் முன்னலையில் இடம்பெற்று வந்தன.

இந்த வழக்கு தொடர்பான விசாரனை திங்கள் கிழமை (11) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் மீண்டும் எடுக்கப்பட்டது.

இது தொடர்பாக பாதிப்படைந்த மக்கள் சார்பாக மன்றில் முன்pலையாகி வரும் சிரேஷ்ட சட்டத்தரனி வி.எஸ்.நிரன்ஜன் தெரிவிக்கையில்

எற்கனவே நீதமன்றத்தால் கோரப்பட்ட அறிக்கை சட்டவைத்திய அதிகாரி ராஜபக்ச அவர்களால் சமர்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அந்த அறிக்கையில் முழு மனதாக எல்லா விடயங்களில் அடங்காத படியினால் இது தொடர்பாக இன்று (11) நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது எனவும்

அதாவது மனித புதை குழியிலிருந்து அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களிலிருந்து அதன் வயது அதன் பால் நிலை இறப்புக்கான  காரணங்கள் போன்ற அறிக்கைகள் மன்றில் சமர்பிக்க வேண்டிய நிலை இருப்பதாலும்

ராஜ் சோமதேவ , சோக்போ பொலிசாரின்  ஒட்டு மொத்த அறிக்கைகள் பெற்றுக் கொண்ட பின்னரே சரியான தீர்மானம் எடுக்க முடியும் என மன்றின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து மனித புதை குழி அகழ்வுக்கு பொறுப்புவாய்ந்த அதிகாரியாக திகழ்ந்த சட்ட வைத்திய அதிகாரி . ராஜபக்ச அவர்களை மன்றில் ஆஜராகும்படி கட்டளை அனுப்ப மன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ் வழக்கு எதிர்வரும் மே மாதம் 13ந் திகதி அழைக்கப்படும் எனவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.