இலங்கை இந்திய நற்புறவு ஒன்றியத்தினால் மன்னார் பிராந்திய செய்தியாளர் வாஸ் கூஞ்ஞ கௌரவிப்பு

தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி தேசிய பத்திரிகை நிறுவனத்தின் அனுசரனையுடன் இலங்கை இந்திய நற்புறவு ஒன்றியத்தினால் வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் ஆகிய மாகாணங்களில் தெரிவு செய்யப்பட்ட கலைஞர்கள் , சமூக சேவையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (10) கண்டி கெப்பற்ரிப்பொல மண்டபத்தில் இடம்பெற்றது

இதில் மன்னார் பிராந்திய சிரேஸ்ட ஊடகவியலாளர் லோறன்ஸ் கொன்சால் வாஸ் கூஞ்ஞ (வாஸ் கூஞ்ஞ) ‘ஊடக செம்மல் மிக சிறந்த ஊடகவியலாளர்’ என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

வழங்கப்பட்ட விருதில் தினகரன் மற்றும் தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் டீ.சென்தில் வேலவர் , நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கலாநிதி வீ.இராதாகிருஷ்ணன் , மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சரும் வட மாகாண ஆளுநருமான கௌரவ சரத் ஏக்கநாயக்க . ஓய்வுநிலை பிரதி பொலிஸ் மா அதிபதி எம்.ஏ.எட்மன்ட் மகின்ட்ரா , பேராதனிய பல்கலைக்கழக முன்னாள் தமிழ் பிரிவு பிரதம பேராசிரியர் துரை மனோகரன் , அரசாங்க ஊடக மொழி பெயர்ப்பாளர் கே.ஈஸ்வரலிங்கம் மற்றும் இந்தியா இலங்கை நற்புறவு அமைப்பு தலைவர் தேசமானி எம்.தீபன் ஆகியோரால் கையொப்பம் இடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.