சிவராத்திரி வீடு திரும்பிய பெண் யானை தாக்கி சாவு.

closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

(ஞானம்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திகிலிவெட்டை பகுதியில் இன்று (09) காலை 5.30 மணியளவில் காட்டு யானை தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்தார்.

நேற்று சிவராத்திரி விரதத்துக்கு ஆலயத்துக்கு சென்று  வீட்டு திரும்பும் நிலையில் யானை தாக்கியதாகவும் தெரியவருகிறது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த வெற்றிவேல் கமலாவதி 52 வயதுடையவரே உயிரிழந்தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.

அண்மைக் காலமாக காட்டு யானைகளின் குறித்த பிரதேசத்தில் தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையினை காட்டு யானைகளை கட்டுப்படுத்துமாறு பிரதேச மக்கள் தொடர்ச்சியான கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.