தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷணன் தெரிவிப்பு
( வாஸ் கூஞ்ஞ)
இவ்வருடம் இடம்பெற்ற சிவராத்திரி தினத்தில் (08) மன்னார் பாடல் தளமான திருக்கேதீஸ்வரத்தில் கடந்த வருடத்தைப்போன்று சுமார் ஐந்து இலட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டதாக திருக்கேதீஸ்வர ஆலய பரிபாலகர் சபையின் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷணன் தெரிவித்தார்.
மன்னார் பாடல்தளமான திருக்கேதீச்சர ஆலயத்தில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழா மிக சிறப்பாக இடம்பெற்றதாக ஆலய பரிபாலகர் சபையின் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷணன் மேலும் தெரிவிக்கையில்
சிவராத்திரி தினமான வெள்ளிக்கிழமை (08) காலை ஐந்து மணிமுதல் திருவந்தல் பூசையுடன் ஆரமப்பிக்கப்பட்டு தொடர்ந்து காலை திருக்குடத்து அபிஷேகமும் விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.
வசந்த அலங்கார பூஜைகளுடன் சுவாமி எழுந்தருளி வசந்த மண்டபத்தில் வீற்றிருந்து தொடர்ந்து அர்ச்சனை வழிபடுகள் நடைபெற்றன.
இவ்வாறு அன்று பகல் பத்து மணியளவில் உச்சக்கால மற்றும் விஷேட பூஜைகளும் இடம்பெற்றன.
மாலை மூன்று மணிமுதல் குருப்பூஜை ஸ்நபன அபிடேகம் இடம்பெற்று மாலை நான்கு முப்பது மணிக்கு மகா பிரதோஷகால பூசை மற்றும் மாலை பூசையும் இடம்பெற்றது.
இதைத் தொடர்ந்து முன்னிரவு ஆறு மணி தொடக்கம் பதினொரு மணிவரை முதலாம் இரண்டாம் மற்றும் மூன்றாம் சாமக் கும்பப் பூசைகளும்
நல்லிரவு 12.15 க்கு இலங்கோற்பவ பூசையைத் தொடர்ந்து பின்னிரவு 2 மணி தொடாக்கம் 3 மணிவரை நான்காம் சாமப் பூசைகளும் அதிகாலை 4.15 முதல் 5.30 மணிவரை திருவனந்தம் பூசை காலை பூசை வசந்த மண்டபவ அலங்காரப் பூசைகள் தொடர்ந்து பெருமான் தீர்த்தோற்சவத்திற்கு புனித பாலாவித் தீர்த்ததுக்கு எழுந்தருளினார்.
மன்னார் மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்டதுக்கு அமைவாக சகல திணைக்களங்களும் சிறந்த முறையில் செயற்பட்டமைக்கு ஆலய பரிபாலகர் சபையின் தலைவர் எஸ்.எஸ்.இராமகிருஷணன் நன்றி தெரிவித்துள்ளதுடன் சுகாதாரப் பகுதினரும் சிறந்த முறையில் தங்கள் கடமைகளை முன்னெடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படு கின்றது.