கடுக்காமுனை பாடசாலையில் இல்ல விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கடுக்காமுனை வாணி வித்தியாலயத்தில் இல்ல மெய்வல்லுனர் விளையாட்டு போட்டி நேற்று (07) வியாழக்கிழமை இடம்பெற்றது.

இதனை வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன் போது ஒலிம்பிக் தீபம் ஏற்றல்,அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றமையுடன் போட்டிகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கி வைக்கப்பட்டன. மேலும் பாடசாலையின் முன்னாள் அதிபர் சின்னத்தம்பிபோடி, வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் ஆகியோர் கிராம மக்களினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

வித்தியாலய அதிபர் சா. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன், கோட்டக் கல்விப் பணிப்பாளர் மூ.உதயகுமாரன், உதவிக்கல்விப் பணிப்பாளர் சந்திரகுமார்,பாலர் பாடசாலை பணியக பணிப்பாளர் சந்திரமோகன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.