சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் தலைவராக USF Srilanka அமைப்பின் செயற்பாட்டாளர் என்.எம். சியாம் தெரிவு.

(எம்.எம்.றம்ஸீன்)  சாய்ந்தமருது பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் இந்த வருடத்திற்கான நிர்வாகத் தெரிவானது இளைஞர் சேவை அதிகாரி எம். எம். சமீஹூல் இலாஹி அவர்களின் தலைமையில் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்க, கிழக்கு மாகாணக் காரியாலத்தின் உதவிப் பணிப்பாளர் யூ.எல்.ஏ.மஜீட், தேசிய இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதி அஸ்லம் சிப்னாஸ் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாரக் அலி  ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் சாய்ந்தமருது பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 20 க்கும் மேற்பட்ட இளைஞர் கழகங்களில் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது 2024 ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாக தெரிவு நடைபெற்றது.
தலைவராக USF Srilanka  இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் என்.எம். சியாம், உப தலைவராக  கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலைப்பீட மாணவன் ஏ. ஆர்.எம். ஜப்ரான், பொருளாளராக BCAS நிறுவனத்தின் பகுதி நேர விரிவுரையாளர் எம்.எஸ்.தானீஸ், உப செயலாளராக ஏ. எம். ஆதீல், அமைப்பாளராக ஏ.ஜீ.எம். அப்ரித், உப அமைப்பாளராக  எம். பர்ஹத் பராஸ் மற்றும் விளையாட்டு பிரிவுத் தலைவராக விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம். அஹமட் சம்லி ஆகியோர்  தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.