( வி.ரி.சகாதேவராஜா) உலகின் முதல் தமிழ் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகள் பிறந்த இல்லத்திற்கு மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91/ 92 அணியினரின் திருகோணமலை ஆசிரியைகள் வாழ்க்கையில் முதல் முறையாக நேற்று முன்தினம் விஜயம் செய்தனர்.
திருகோணமலை ஆசிரியைகளான சசிகலா, இந்திராணி, நளினி , குமுதினி மற்றும் சுகுணமதி( மட்டக்களப்பு) டில் பிரபா( கோட்டைக்கல்லாறு) ஆகியோர் வாழ்க்கையில் முதல் முறையாக விஜயம் செய்து பார்வையிட்டனர்.
இதன் போது விபுலானந்த அடிகளாரின் பிறந்த இல்லம், அரும் பொருள் காட்சியகம், பிரார்த்தனையகம், மணிமண்டபம், திருவுருவ சிலைகள் போன்றவற்றை பார்வையிட்டார்கள்.
கிழக்கில் பிறந்த பெரும் மகான் ஒருவரின் பிறந்த இல்லத்தை வாழ்க்கையில் முதல் முறையாக இப்போதாவது பார்க்கக்கிடைத்தமை ஒரு பாக்கியமே என்று அவர்கள் கருத்துரைத்தனர்.
மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலை 91 /92 அணியினரின் புலன அணியின் தலைவர் வீ.ரி.சகாதேவராஜாவும் ,ஓய்வு நிலை பொறியியலாளர் எஸ்.அருள்பிரகாசமும் கலந்து கொண்டனர்.