கல்முனையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கப்பட்டன.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)   அம்பாறை மாவட்டத்தின் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகள் கையளிக்கும் நிகழ்வு  (04.03.2024) நடைபெற்றது.

மீள்குடியேற்ற அமைச்சின் 2023 ஆம் ஆண்டு நிதி ஒதுக்கீட்டின் கீழ் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தெரிவு செய்யப்பட்ட 34 பயனாளிகளுக்கு இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 10 லட்சம் ரூபா செலவில் கட்டப்பட்ட இந்த வீடுகளை முதற்கட்டமாக  பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜ் பிரதம அதியாக கலந்து கொண்டு வீடுகளை திறந்து பயனாளிகளிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.ஸ்ரீரங்கன் உட்பட பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டனர்.