போசாக்கு உணவுப் பொதி வழங்கி வைப்பு.

(நூருல் ஹுதா உமர்)   அரச சார்பற்ற கிரிசாலிஸ்(chrysalis) நிறுவனம் சம்மாந்துறை பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 80 குடும்பங்களுக்கான  போசாக்கு உணவுப் பொதி வழங்கும் 04ம் கட்ட நிகழ்வு  (04) சம்மாந்துறை பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் கலாநிதி ஏ.எல்.எம் அஸ்லம் தலைமையில் இடம்பெற்றது.
இப் போசாக்கு உணவுப் பொதி வழங்கும் நிகழ்வுக்கு சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா பிரதம அதிதியாக கலந்து கொண்டு பொதிகளை வழங்கி வைத்தார்.
மேலும் இந் நிகழ்வுக்கு உதவி பிரதேச செயலாளர் யூ.எம் அஸ்லம்(LLB),பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.எம் நவாஸ், விடயத்திற்கு பொறுப்பான சிரேஸ்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ரக்கீபா கிரிசாலிஸ்(chrysalis) நிறுவனத்தின் திட்ட உதவியாளர் பி. தசதரா உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.