விபத்தில் இளைஞன் பலி.(Video)

(எருவில் துசி) களுவாஞ்சிகுடி எருவில் பிரதேசத்தில் இன்று காலை 02.00 மணியளவில் எருவில் மாரியம்மன் கோயில் அருகாமையில் உள்ள குருமன்வெளி எருவில் பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒரு இளைஞன் பலியானார்.

எருவில் கிராமத்தை சேர்ந்த கிருபாகரன் ஜலணன் (வயது 20) என்பவர் தனது நண்பனின் பிறந்த தினத்தை முன்னிட்டு நள்ளிரவு வேலையில் சென்றிருந்த நிலையில் உந்துருளியின் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீயோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதுன்டு உயிரிழந்தார். அவரின் மரணம் தொடர்பான விசாரணையினை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வரும் நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“இளைஞர்களே மகிழ்சி மரணத்தில் முடிவுறுவதை மாற்றுவேம்”