உழவு இயந்திரந்தின் பற்றரி மற்றும் பெட்டியின் பம் சங்கிலி உள்ளிட்டவைகள் திருடப்பட்ட சம்பவம்

வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரந்தின் பற்றரி மற்றும் பெட்டியின் பம் சங்கிலி உள்ளிட்டவைகள் திருடப்பட்ட சம்பவம் நேற்று முன் (01) இரவு இடம்பெற்றுள்ளது.
வீட்டின் உரிமையாளர்கள் வீட்டில் உறக்கத்தில் இருந்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
குறித்த வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திரத்தின் பற்றியை திருடிய திருடர்கள் அங்கு கழற்றி வைக்கப்பட்டிருந்த உழவு இயந்திர பெட்டியின் பம்மினையும் சங்கிலிiயையும் திருடிச் சென்றுள்ளதாக வீட்டின் உரிமையாளரால் பொலிசாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிசார் முறைப்பாட்டினை பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.