தேசிய போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களை கல்வி அதிகாரிகள் பாடசாலை சென்று வாழ்த்தினர்.

( வி.ரி. சகாதேவராஜா)
தேசிய போட்டியில் வெற்றி பெற்ற சாதனை மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையின் கல்வி அதிகாரிகள் பாடசாலைக்கு சென்று வாழ்த்தினார்கள்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றது.
அகில இலங்கை தேசிய சமூக விஞ்ஞான போட்டி-2023பெறுபேறுகள் நேற்று வெளியானது. இதில் சம்மாந்துறை வலயத்தில் மூன்று மாணவர்கள் சாதனைபடைத்தனர்.

 சம்மாந்துறை வலயத்தில் உள்ள மஜீத் புரம் மகா வித்தியாலய மாணவி  கே.எம்.எவ்.  அசீமா,(தரம்12/13), விவேகானந்த மகா வித்தியாலய மாணவி எஸ்.குகதர்சனா,(தரம்-09),இறக்காமம் அஷ்ரப் ம.கல்லூரி  எம்.கே..யூசுப்சயான்(தரம்-07) ஆகியோர் தேசிய மட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களை குறித்தபாடசாலைக்குச்சென்று வலயக் கல்விப் பணிமனை அதிகாரிகள் வாழ்த்தி கெளரவித்தார்கள்.
பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான எம்.வை.அறபாத் எ.எல்.எம்.மஜீத் உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம். நிஷார் ஆகியோர் பாராட்டச் சென்றிருந்தனர்.