நாவற்குடா இந்து கலாசார நிலையத்தினால் மக்கள் நலன்சார்ந்து  வேலைத்திட்டங்கள்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இந்து சமூகம்   முழுமையாக  பயன்பெறும் வகையில்  இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு நாவற்குடா இந்து கலாசார நிலையமானது  பின்வரும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் முதற்கட்டமாக யோகாசனப்பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது சிறப்பாக நடைபெற்றுக்கொண்டுவரும் இவ்வேளையில்  எதிர்வரும் வாரங்களில் பின்வரும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.

🌹பண்ணிசை பயிற்சி வகுப்புக்கள் (மாணவர்களுக்கானது)🌹இளைஞர், யுவதிகளுக்கான ஆன்மீக மற்றும் தலைமைத்துவ பயிற்சிகள்🌹வயலின் வகுப்புக்கள்
🌹மிருதங்க வகுப்புக்கள்
🌹நடன வகுப்புக்கள்

இவைதவிர எதிர்வரும் காலங்களில் கீழ் வரும் செயற்பாடுகளும் தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளது.

✈கதாப்பிரசங்க பயிற்சி (அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கானது)

✈கிழக்குப்பல்கலை கழகத்துடன் இணைந்த வகையில் ஆன்மீக பிரசாரகர் பயிற்சி நெறி

✈  மாதம் ஒருமுறை  சத்சங்கம் இடம்பெறல்

✈  முன்மாதிரியாக இயங்கும் அறநெறிப்பாடசாலைகளில் மாதிரி நூலகம் அமைக்கும் செயல்திட்டம்

✈இந்து சமய குருமார்களுக்கான  விசேட செயலமர்வுகள், கலந்துரையாடல்கள்

✈அபர கிரியைகள் தொடர்பான முறையான பயிற்சிகளும், தெளிவூட்டல்களும் வழங்கப்படும்

✈ஆலய தர்ம கர்த்தாக்களுக்கான தலைமைத்துவ பயிற்சிகள், விசேட செயலமர்வுகள், கலந்துரையாடல்கள்

✈இந்து இளைஞர், யுவதிகளுக்கான ஆன்மீக திறன் மேம்பாட்டு பயிற்சி பட்டறைகள், செயலமர்வுகள்

✈மாவட்டத்தில் இயங்கும் இந்து மன்றங்கங்களின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல்கள்

✈நாவற்குடா இந்து கலாசார நிலையத்திற்கென புதிதாக வாசகர் வட்டத்தினை உருவாக்கி அனைவரும் பயன்பெறும் வகையில்  இங்குள்ள நூலகத்தை பயனுள்ளதாக்குதல்.

✈இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்படும் புத்தகங்கள் நியாயமான விலைக்கழிவுடன் விற்பனை செய்யப்படும்

✈இந்து தர்மாசிரியர், அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான இறுதிநிலை பரீட்சை கருத்தரங்குகள், சைவப்புலவர், இளஞ்சைவ புலவர் பரீட்சைகள், சைவசித்தாந்த பிரவேச பாலபண்டிதர் பரீட்சைகளுக்கான விசேட கருத்தரங்குகளை நடாத்துதல்.

✈பல்கலைக்கழக விசேட கற்கைகள், வரலாற்றுத்துறை சார்ந்த பல்கழக மாணவர்களுக்கான சாசனவியல் கருத்தரங்கு நடாத்துதல்

✈சைவசித்தாந்த முதுமானி பட்டப்படிப்பிற்கான  கற்பித்தல் செயற்பாடுகள் நடாத்துதல்

✈63 நாயன்மார்கள், சமய பெரியார்களின் குருபூசை தினங்கள், ஜனனதின நிகழ்வுகளை நடாத்துதல்
அனைவருக்கும் சைவசமய தீட்சை வழங்குதல்

✈நவராத்திரி விழாக்காலத்தில் விசேடபூசை வழிபாடுகளுடன் அறநெறிப்பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளை நடாத்துதல்

✈அறநெறிப்பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட பயிற்சிகள், அறநெறிக்கல்வி பாடத்திட்டம் தொடர்பான தொடர் பயிற்சி நெறியை நடாத்துதல்

✈அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள், ஆசிரியர்களுக்கான சீருடைகள், கையேடுகள் அனைத்து அறநெறிப்பாடசாலைகளுக்கும் கிடைக்ககூடிய  வகையில் பொறிமுறை உருவாக்கப்பட்டு  அவை பிரதேச செயலக  இந்து கலாசார உத்தியோகத்தர்கள் மூலம் உரிய பிரதேச செயலக பிரிவுகளில் வைத்து வழங்குவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.

✈தமிழரின் பாரம்பரிய கலை வடிவங்களுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் கலைஞர்களுக்கான முன்னோடி நிகழ்வுகளை நடாத்துதல்

✈சுவாமி விபுலானந்தர்,  ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் மற்றும் தமிழறிஞர்களின் மாநாடுகள், ஆய்வரங்குகளை ஒழுங்குசெய்து நடாத்துதல்

✈மாலை கட்டுதல், பல்வேறு விதமான தோரணம் பின்னுதல், கோலம் போடுதல் முதலான செயன்முறை பயிற்சிகள் வழங்குதல்

✈கந்தபுராண பாராயண பயிற்சி, திருவாசகம் முற்றோதல் பயிற்சி வழங்குதல்

இச்செயற்பாடுகளை வினைத்திறனுடனும் சிறப்பாகவும் முன்னெடுப்பதற்கு தங்களது முழுமையான ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றோம்.

மேலதிக தகவல்களுக்கு :