( வாஸ் கூஞ்ஞ) தலைமன்னார் பொலிஸ் பிரிவில் மாணவி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கும் சம்பவம் ஒன்று தலைமன்னார் ஊர்மனை பகுதியில் கடந்த 15.02.2024 அன்று இடம்பெற்றிருந்தது.
இச்சம்பவம் தொடர்பாக சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக இச்சந்தேக நபர் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இதன் வழக்கு வியாழக்கிழமை (29) மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் நீதிபதி கே.எல்.எம்.சாஜித் முன்னிலையில் விசாரனைக்கு எடுக்கப்பட்டது.
இன்றைய வழக்கில் இறந்த மாணவியின் பெற்றோர் உறவினர் மற்றும் சம்பவம் அன்று பிள்ளையின் நடமாட்டத்தை கண்கண்ட சாட்சி என ஐந்து பேர் மன்றில் விசாரனைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
சந்தேக நபரை எதிர்வரும் 14.03.2024 வரை விளக்க மறியலில் வைக்கும்படி மன்று கட்டளைப் பிறப்பித்துள்ளது.
இவ் வழக்கின்போது இவ் வழக்கை பார்ப்பதற்காக மன்றின் சூழல் தலைமன்னார் ஊர்மனை மக்களால் நிரம்பிக் காணப்பட்டது.