கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் பொதுச்சபை கூட்டம்.

(எம்.ஏ.ஏ.அக்தார்)  காத்தான்குடியிலுள்ள கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி அமைப்பின் பொதுச்சபை கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த புதன்கிழமை கிழக்கிலங்கை இஸ்லாமிய வலது குறைந்தோர் நலன்புரி  அமைப்பின் பள்ளிவாசல் மண்டபத்தில் இடம்பெற்றது
இதன்  தலைவர்  மெளலவி எஸ் எம்.எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் காத்தான்குடி பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஏ. சி நஜிமுதீன் பிரிவு கிராம உத்தியோகத்தர்  மபாஸா சுல்பிகார் உட்பட  அபிருத்தி உத்தியோகத்தர்கள் அமைப்பின்  நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்
இதன் போது கடந்த கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் கடந்த கூட்ட றிக்கையும் வாசிக்கப்பட்டது
இதை அடுத்து சபையோரின் கருத்துக்கள் இடம்பெற்றதுடன் புதிய நிர்வாக சபையும் தெரிவு செய்யப்பட்டது
இதன் தெரிவை சமூக சேவை உத்தியோகத்தர் நஜ்முதீன் நடாத்தினார்
புதிய தலைவராக  ஓய்வு பெற்ற அதிபர் எம் ஏ.எஸ் சி எம்..சத்தார் உபதலைவராக மௌலவி எஸ் எம் எம் முஸ்தபா செயலாளராக சட்டத்தரணி  முகைதீன் சாலி பொருளாளராக அல்ஹாபிழ் நாசர்  உப  செயலாளராக  மக்பூல்  ஹாஜி மற்றும்  நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலோசகர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.