கிழக்கின் மூத்த நிருவாக சேவை அதிகாரி கோபாலரெத்தினத்திற்கு பாராட்டுவிழா.

( வி.ரி.சகாதேவராஜா)
 கிழக்குமாகாண பொது சேவை ஆணை குழுவின் முன்னாள் செயலாளரும், இந்நாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருமான கிழக்கின் மூத்த நிர்வாக சேவை அதிகாரி கலாநிதி.எம் கோபால ரெத்தினத்திற்கு பாராட்டு விழா நேற்று இடம்பெற்றது .
கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக் குழுவின் செயலாளர் ஏ. மன்சூர் தலைமையில் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது .
இரண்டு வருட காலம் பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய கோபாலரெத்தினத்திற்கு அங்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு விழா இடம்பெற்றது.
 அமைச்சின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்தார்கள்.