மட்டக்களப்பில் கண்டல் தாவரங்கள் நடும் பணி முன்னெடுப்பு.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு வாவியோரங்களில் கண்டல் தாவரங்கள் நடும் நிகழ்வு புதன்கிழமை (28) இடம் பெற்றது.

மட்டக்களப்பு விமானப்படையின் கட்டளை தளபதி குறுப் கப்டன் சரத் பண்டார தலைமையில் சேற்றுக்குடா, சுமைதாங்கி பகுதி வாவிக்கரை ஓரங்களில், சிறந்த சூழலை ஏற்படுத்தும் நோக்குடன் இக் கண்டல் தாவரங்கள் நடப்படுவதாக விமானப்படையினர் தெரிவித்தனர்.

இதன் போது முதற்கட்டமாக 500 கண்டல் தாவரங்கள் மட்டக்களப்பு விமானப்படை  உத்தியோகத்தர்களால் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.