கலாநிதி எஸ் ஸ்ரீபிருந்திரனின் இலங்கையில் தொலைக்காட்சித் தொழிநுட்பத்தின் வளர்ச்சி நூல் வௌியீட்டுவிழா இன்று 29ம் திகதி வியாழக்கிழமை மாலை 2.30 மணிக்கு மஹரகம கலாநிதி CWW கன்னங்கர மண்டபத்தில் நடை பெற உள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக உயர்கல்வி இராஐாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன், சிறப்பு விருந்தினராக தேசிய கல்விநிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் பிரசாத் சேதுங்க, கௌரவ விருந்தினராக கெபிட்டல் மகாராஐா குழுமம் சக்தி ரி.வியின் முன்னாள் பணிப்பாளர் திரு எஸ்.எம்.வரதாராஜன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன் முதற்பிரதியினை புலவர் ஹாஷிம் பெறவுள்ளதுடன் வெளியீட்டுரையை பேராசிரியர் சி.மௌனகுரு நிகழ்த்தவுள்ளார்