மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயம் நடாத்திய வலயமட்ட நூலகப்போட்டி, வருடத்திற்கான அதிகூடிய மாணவர் வரவு வீத போட்டி போன்றவற்றில் முதல் மூன்று இடங்களைப் பெற்றுக் கொண்ட பாடசாலைகளுக்கான வெற்றிக்கிண்ணம், சான்றிதழ் போன்றவை வழங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (28) புதன்கிழமை இடம்பெற்றது.
வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன் தலைமையில் குறிஞ்சாமுனை சக்தி வித்தியாலயத்தில் குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது. இதன்போது வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பாடசாலை வகை 3, வகை 2, வகை 1சி, 1ஏவீ என்ற மூன்று வகைப்பிரிவின் கீழ் ஒவ்வொரு வகைப்பிரிவிலும் மூன்று இடங்களுக்கு வெற்றிக்கிண்ணமும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டமையுடன் நூலகப் போட்டியில் பங்கிகெடுத்த பாடசாலைகள் அனைத்துக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.