கித்துளில் மருத்துவ முகாம்

அபயம் நிறுவனத்தின் அனுசரணையுடன் அரசாங்க மருத்துவ சங்க மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் கித்துள் ஸ்ரீ கிருஷ்ணா மகா வித்தியாலயத்தில் இன்று(25) இலவச மருத்துவ முகாமும் இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.

இதன்போது 200க்கு மேற்பட்ட நோயாளர்கள் வருகை தந்து சிகிச்சை பெற்று சென்றனர். 100க்கு மேற்பட்டோர் மூக்கு கண்ணாடியை இலவசமாக பெற்றுக் கொண்டனர்.

மேலும், ஏழு வைத்தியர்கள் இலவசமாக நோயாளர்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

தொற்றா நோயாளர்கள் தொடர்பில் இதன் போது அதிகம் கவனம் செலுத்தப்பட்டமையுடன் இனங்காணப்பட்ட நோயாளர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு செல்வதற்கும் வலியுறுத்தப்பட்டனர்.

 

கண்பரிசோதனையில் அதிகளவானர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது அபயம் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள், வைத்தியர்கள், சுகாதார பரிசோதகர்கள், சுகாதார ஊழியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.