சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழாவும் நடைபவனியும் பேரணியும்..

(அ . அச்சுதன்)
பாடசாலை வளர்ச்சியின் எவ்வளவு உச்சங்களை தொடமுடியுமோ அத்தனை உச்சங்களையும் தொட்டு சாதனை படைத்த திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் மத்திய கல்லூரியின் 67 வது ஆண்டு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை (25) காலை 9 . 15 மணிக்கு கல்லூரியில் கல்லூரியின் அதிபர் சோ.  பாக்கியேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.

பிரதான நிகழ்வாக சேனையூர் மத்திய கல்லூரியில் இருந்து ஆரம்பமான நடை பவனி மூதூர் கிழக்கின் பிரதான வீதியின் ஊடக சேனையூர்,  கட்டைபறிச்சான் , கடற்கரைச்சேனை வீதியின் ஊடக இடம் பெற்றது.
கல்வி அதிகாரிகள்,  பாடசாலை மாணவர்கள்,  கல்லூரியின் பழைய மாணவர்கள் நடை பவனியில் கலந்து சிறப்பித்தனர்.
பேரணியில் தமிழர் கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான நிகழ்வுகள் இடம்பெற்றதோடு வாகனங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அத்தோடு கல்லூரியின் முன்னாள் அதிபர்களின் திரு உருவப் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதன்போது சேனையூர் மத்திய கல்லூரியின் ஆயிரக்கணக்கான பழைய மாணவர்கள் தங்களது வகுப்புக்களை வேறுபடுத்திக் காட்டும் வகையில் மேலங்கிகளை அணிந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி பேரணியில் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது