
திருக்கோவில் நிருபர்-எஸ்.கார்த்திகேசு)
அத்திமலே கொட்டியாகல பிரதேசத்தில் பொறி வெடியில் சிக்கி திருக்கோவியை சேர்ந்த கால்நடை பராமரிப்பாளர் பரிதாபமாக பலி
மொனராகல மாவட்டம் சியம்பலாண்டு அத்திமலே பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட கொட்டியாக பகுதியில் கால் நடைகளை மேய்த்துக் கொண்டு இருந்த திருக்கோவில் பிரதேசத்தினை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தை பொறி வெடியில் சிக்கி பரிதாபகரமாக பலியாகியுள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவது யாதெனில் குறித்த நபர் மாடுகளை மேய்த்துக் கொண்டு இருந்த போது இங்கு வைக்கப்பட்டு இருந்த பொறி வெடியில் சிக்கி நேற்று 24ஆம் பலியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர் திருக்கோவில் பொலிஸ்ப் பிரிவுக்குட்பட்ட திருக்கோவில் 04 காயத்திரி கிராமம் 13ஆம் வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மோகனராசா சசிகுமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் இவ் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.