மட்டக்களப்பில் விவசாயிகளுக்கு பயிற்சி செயலமர்வு!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறு போகத்தில் நெல் நடுகையினை இயந்திரம் மூலம் நடுகை மேற்கொள்வது  தொடர்பான பயிற்சி செயலமர்வு இன்று மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மாவட்ட விவசாய பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.

உற்பத்தியை அதிகரித்து விவசாயத்தை நவீனப்படுத்தல் தொடர்பாக விவசாயிகளுக்கு முதல் முறையாக இயந்திரம் மூலம் நடுகை செய்வது தொடர்பாக  அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி திட்டத்தினை விவசாய அமைச்சு விவசாயத் திணைக்களத்துடன் இணைந்து நாடளாவிய  ரீதியில் விவசாய நவீனமயப்படுத்தல் நடைமுறைகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வேலை திட்டத்தினை மாவட்ட விவசாய சம்மேளனத்தின்  ஏற்பாட்டில் மாவட்ட  விவசாய திணைக்கள  விரிவாக்கல் பிரிவுடன் இணைந்து,
மாவட்ட  விவசாய திணைக்கள  விரிவாக்க பிரிவு பிரதி பணிப்பாளர்  பரமேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி  திணைக்கள பிரதி ஆணையாளர்  ஜெகன்நாத், வளவாளர் ரஜிதன், பயிற்சி பட்டறையில் விவசாய முன்னோடி குழு தலைவர் உட்பட விவசாயிகள், மாவட்ட விவசாய பயிற்சி நிலைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.