பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் நிர்வாக தெரிவும், பொதுச் சபைக் கூட்டமும்!!

காத்தான்குடி பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாகத் தெரிவும், பொதுச் சபைக் கூட்டமும் கடந்த (18) திகதி பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.டபிள்யூ.இர்சாத் அலி அவர்களின் வழிகாட்டலில் சம்மேளன தலைவர் ஐ.எல்.எம்.சாபிர் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.

இக் கூட்டத்தில்  பிரதம அதிதியாக உதவி பிரதேச செயலாளர் திருமதி.எம்.எஸ்.சில்மியா ஏனைய அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மாவட்ட உதவி பணிப்பாளர் என்.குகேந்திரா, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி திருமதி.நிசாந்தி அருள்மொழி, தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மட்டக்களப்பு மாவட்ட NYSCO முகாமையாளர் திருமதி.கே. சதீஸ்வரி, காத்தான்குடி சமூக மேம்பாட்டிற்கான மக்கள் ஒன்றிய பணிப்பாளர் தேசபந்து எம்.ஐ.எம்.ஹாரிஸ், முன்னால் மாவட்ட இளைஞர் கழக சம்மேளன பொருளாளரும் St.Jon’s மாவட்ட உதவிப் பணிப்பாளருமான என்.எம்.பாயிஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்வரும் அடிப்படையில் 2024 ஆம் ஆண்டுக்கான பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிருவாகத்தெரிவு இடம்பெற்றது.

தலைவராக ஏ.எப்.எம்.சுகைல், செயலாளராக ஏ.டபிள்யூ.இர்சாத் அலி – (இளைஞர் சேவை உத்தியோகத்தர் – பதவி வழியாக), பொருளாளராக எம்.எப்.அப்துல் றகுமான்.
உப செயலாளராக எம்.ஐ.எம்.அர்ஹப்,
உப தலைவராக ஜே.எம்.எஸ்.அப்பாஸ்,
அமைப்பாளராக எம்.எஸ்.ஏ.சிம்ராஸ்,
உப அமைப்பாளராக ஏ.ஆர்.றசா முஹம்மட், பிரிவுச் செயலாளர்களாக
விளையாட்டிற்கு எம்.எப்.எம்.சௌக்கி,
கலாச்சாரத்திற்கு எம்.என்.அப்துல்லாஹ், முயற்சியான்மைக்கு எஸ்.எப்.சுரைபா,
ஊடகத்திற்கு எம்.ஜே.ஏ.முஷர்ரப்,
தேசிய சேவைக்கு எம்.என்ஏ.நுசைக்,
கல்வி / பயிற்சிக்கு எம்.ஏ.எப்.சனா, நிதிக்கு என்.எம்.எம்.றிசாத், சூழல் பாதுகாப்புக்கு எம்.எச்.ஹஸ்மத் சிபா,
கணக்கு பரிசோதகர் கே.எம்.இம்ரான் ஆகியோரும் ஒழுக்காற்றுக்குழு உறுப்பினர்களாக அப்துல்லாஹ், நுசைப், அப்ழல், நப்லி, ஹமா ஆகியோர்  உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.