கல்முனை வலயப் பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோக நிகழ்வு

கல்முனை வலயப் பாடசாலைகளுக்கான இலவச சீருடை மற்றும் இலவச நூல் விநியோக நிகழ்வு இன்று இடம்பெற்றது
 
மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரது பங்கேற்புடன் நடைபெற வேண்டுமென்ற கல்வியமைச்சின் பணிப்பரைக்கமைய கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழு தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.எம்.முஸாரப் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்
 
மேலும் மாணவர்களது கலை நிகழ்வுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை வலயத்திலுள்ள கல்முனை முஸ்லிம் மற்றும் கல்முனை தமிழ் கோட்டங்களைச் சேர்ந்த 31 பாடசாலை மாணவர்களுக்கு இவ் விநியோக நடவடிக்கைகள் இடம்பெற்றன
 
இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,கோட்டக் கல்விப் பணிப் பணிப்பாளர்கள்,அதிபர்கள் உட்பட  பலரும் கலந்து கொண்டனர்