மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற்’ மண்டபத்தில் சதுரங்க விளையாட்டு சுற்றுப் போட்டி

க.ருத்திரன்.
மாணவர்களின் அறிவாற்றல் மற்றும் ஆக்கத்திறன்களை மேம்படுத்தும் முகமான சதுரங்க விளையாட்டு சுற்றுப் போட்டி மட்டக்களப்பு ‘வில்லியம் ஓல்ற்’ மண்டபத்தில் நடைபெற்று வருகிறது.
கடந்த 16.02.2024 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பமாகிய சதுரங்க சுற்றுப் போட்டியானது தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வருகிறது.
இறுதிப் போட்டியும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று 19.02.2024 ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது.
இப்போட்டியானது வரலாற்றில் முதற் தடவையாக கிழக்கு மாகாணத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சர்வதேச ரீதியான தரப்படுத்தலுக்குட்பட்ட ‘மேஜர்’ தர போட்டியாகும்.
மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை ஆகிய 3 மாவட்டங்களைச் சேர்ந்த  ஆண்,பெண் என இரு பாலாரும் வயது வேறுபாடின்றி பங்குபற்றி வருகின்றனர்.
ஏற்கனவே மாவட்டம் தோறும் நடைபெற்ற அறிமுகப் போட்டியில் தெரிவு செய்யபப்பட்டவர்கள் இவ் மேஜர் போட்டியில்  பங்கு பெற தகுதி உடையவர்களாவர்.
இதில் தெரிவு செய்யப்படும் வீரர்கள் தேசிய மட்ட போட்டிகளில் பங்கு பெறவுள்ளனர்.
இப்போட்டிக்கு நடுவராக சர்வதேச தர சதுரங்கப் போட்டி நடுவர் திவாங்க திஸ்சேர கலந்து கொண்டுள்ளார்.
இச்;சதுரங்க சுற்றுப் போட்டியினை மாணவர் மத்தியில் கிழக்கு மாகாணம் தோறும் நடாத்துவதற்கு  வித்திட்டவரான சமூக சேவையாளர் பா.சுசிகரனின் வழிகாட்டலில் மட்டக்களப்பு சதுரங்க குழுமம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.