சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் அவர்களின் “தேசாந்தரம்” குறுநாவல் வெளியீடு..

ஹஸ்பர் ஏ.எச்)
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம் அவர்களின் தேசாந்தரம் குறுநாவல்
கதிர்.திருச்செல்வத்தின் தலைமையில்
“நம்மட முற்றத்தின் ஏற்பாட்டில் நேற்று (18) திருகோணமலை
 நகரசபை பொது நூலக கேட்போர்
கூடத்தில் வெளியீட்டு விழா இடம் பெற்றது.

நூலின் முதற் பிரதியை கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலக
திட்டமிடல் பணிப்பாளர் பாயிஸ்
அவர்களுக்கு வழங்கி வெளியீட்டு வைக்கப்பட்டது.
நூலுக்கான திறனாய்வினை பொதுச்
சுகாதார உத்தியோகத்தர் வ.முரளிதரன் சிறப்பாக வழங்கினார்.
ஏற்புரையை நூலாசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமலை நவம்
அவர்கள் வழங்கினார்.குறுநாவல் எழுந்த
பின்னணி பற்றிக் கூறினார்.வெகுவிரைவில் தனது நாவல்
வெளிவரவுள்ளமை பற்றியும் குறிப்பிட்டார்.