3620 சங்குகளுடன் ஒருவர் கைது

( வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் சட்டபூர்வமற்ற முறையில் கடல் சங்குகளை அடம்பன் பொலிஸ் பிரிவில் பதுக்கி வைத்திருந்த நபர் ஒருவர் பொலிசாரல் கைது செய்யப்பட்டதுடன் சங்குகளும் மீட்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் வியாழக்கிழமை (15) மாலை இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக பொலிசார் தெரிவிக்கையில் தங்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து அடம்பன் பொலிஸ் பிரிவில் நாயாற்று பகுதியில் சங்கு உடைக்கும் இடத்தை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அனுமதி பத்திரமின்றி 70 மில்லி மீற்றருக்கு குறைந்த 3620 சங்குகள்  தன் வசம் வைத்திருந்ததாக  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெரியகரிசல் பகுதியயைச் சேர்ந்த 50 வயதுள்ள ஒருவரே இது தொடர்பாக .கைது செய்யப்பட்டள்ளார்.

மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சந்திரபால அவர்களின் உத்தரவுக்கு அமைவாக பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் அவர்களின் வழிகாட்டலில் மன்னார் குற்றத்தடுப்பு அதிகாரி சில்வா அவர்களின் தலைமைத்துவத்திலும் மன்னார் மாவட்ட குற்றதத் தடுப்பு பொலிசாரால் இக்கைது இடம்பெற்றது.