நடிகமணி வி. வி. வைரமுத்து அவர்களின் நூற்றாண்டுவிழா அண்மையில் சுவிற்சர்லாந்தில் சிறப்பாக இடம்பெற்றது.
ஐரோப்பா தமிழர் மதிப்பளிப்பு கழகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் வைரமுத்து அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் மற்றும் பூட்டப்பிள்ளைகளும் கலந்து நிகழ்வுக்கு மெருகூட்டினர்.
இந்த நிகழ்வில் பல கலை நிகழ்வுகள் இடம்பெற்றன. குறிப்பாக கலைவளரி ரமணனின் நெறியாழ்கையில் பண்டாரவன்னியன் கூத்து, மக்கள் கலைஞர் இணுவையூர் இந்திரனின் நாடகக் குழுவினர் “அரிச்சந்திர மயானகாண்டம்” நாடகத்தை அரங்கேற்றி நிகழ்வை சிறப்பித்தார்கள்.
குறிப்பிட்ட கழகத்தின் தலைவர் செ. வைகுந்தன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலைஞர்கள் மதிப்பளிப்பும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.