மனித யானை மோதல் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி.

(அஸ்ஹர் இப்றாஹிம்)   மனித யானை அமைதி – இலங்கை (H.El.P. Sri Lanka) மத்திய சுற்றாடல் அதிகாரசபையுடன் இணைந்து  மாபகடவெவ தேசிய விடுமுறை விடுதியில் ஆசிரியர்களுக்கான செயலமர்வை நடத்தியது.
மனித யானை சமாதானம் – இலங்கை (H.El.P. Sri Lanka) அனுசரணையுடன் கல்வித் திணைக்களம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊவா மாகாண அலுவலகத்தின் விழிப்புணர்வுப் பிரிவு ஆகியவற்றுடன் இணைந்து இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
திரு. எஸ். ரம்புக்பொத – நாட்டுப் பணிப்பாளர், எச்.எல்.பி. இலங்கை, திரு. எல்.கே.ஏ ஜயசிங்க-பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையம், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் திரு. டபிள்யூ.ஏ. மஹிந்த விஜேசிங்க மற்றும் சி.இ.ஏ ஊவா மாகாண அலுவலகத்தின் விழிப்புணர்வுப் பிரிவின் சிரேஷ்ட சுற்றாடல் உத்தியோகத்தர் திருமதி. டில்கி சந்திரவன்சா ஆகியோர் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் விரிவுரைகளை நிகழ்த்தினார்கள்.
யானைகளின் நடத்தைகள் மற்றும் சுற்றுச்சூழலுடனான அவற்றின் தொடர்பு, யானைகள் மற்றும் மனிதர்கள் (நடைமுறை தொடர்புகள்), யானை மனித மோதலுக்கான காரணங்கள் மற்றும் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஆலோசனைகள் ஆகிய தலைப்புகளில் கலந்துரையாடல்  நடத்தப்பட்டது.