கோட்டாபய முன்னெடுத்த பெயர் பலகையுடன் சுருங்கிய தேசிய பாடசாலைக்கு

செலவிடப்பட்ட 20 இலட்சங்களில், இரு SMART வகுப்பறைகளை நிர்மாணித்திருக்க முடியும்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

கடந்த அரசாங்கம் பெயர் பலகை பதித்து தேசிய பாடசாலைகளை உருவாக்க  20 இலட்சம் செலவழித்தது. தற்போதைய விலையில் இந்த 20 இலட்சத்தில் 2 ஸ்மார்ட் வகுப்பறைகளை நிறுவியிருக்கலாம். எனவே, பெயர் பலகை அரசியலை கைவிட்டு, பாடசாலைக்கு ஒதுக்கப்படும் அனைத்து நிதியும் பாடசாலை மாணவர்களின் எதிர்கால அபிவிருத்திக்காக பயனுள்ள வகையில் பயன்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத் திட்டத்தின் 99 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் பண்டாரகம, வல்கம,        ஸ்ரீ சத்தாதிஸ்ஸ தேசிய பாடசாலைக்கு

வழங்கி வைக்கும் நிகழ்வில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் வரி செலுத்துவோரின் பணத்தில் நல்ல முறையில் வெளிநாட்டு பயணத்தை அனுபவித்து வருகின்றனர்.அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களின் நலனை விடுத்து, நாட்டின் எதிர்காலத்தை கையேற்கும் பிள்ளைகளின் நலனுக்காக செயற்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் கடனாளிகளாகி விட்டனர்.

நாட்டு மக்கள் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.சம்பளம் போதாமையினால் கடன் பெற்று வாழ்ந்து வருகின்றனர். கடன் வாங்குபவர்கள் வட்டிக்காரர்களிடம் சரணடைந்துள்ளனர், ஆசிரியர்கள் உட்பட கல்வித்துறையில் உள்ள  மனித வளம் உள்ளிட்ட பொது மக்கள் இதில் சிக்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரசியல்வாதிகள் பாடசாலைகளில் பெயர் பலகை பதித்து,கட்டிடங்களை திறந்து, செய்திகளுக்கு நல்ல புகைப்படங்களை அனுப்பி விட்டு வீட்டிற்கு சென்றாலும்,  பாடசாலை கட்டிடங்களை பராமரிக்க முடியாமையினால் இடிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

பயங்கரவாதத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட நாடு ஆட்சியாளர்களின் பொருளாதார பயங்கரவாதத்திற்குள் சிக்குண்டுள்ளது. இந்த பொருளாதார பயங்கரவாதிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி எந்த ஒத்துழைப்பையும் வழங்காது,திருடப்பட்ட வளங்களை நாட்டுக்கு திருப்பி எடுத்து, அந்த பணத்தை நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவோம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.