இலங்கை இராணுவத்தினரால் ஒல்லாந்தர் கோட்டையை அழகு படுத்தும் செயற்திட்டம்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி  ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் 243 ஆம் படைப்பிரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சன்டிம குமாரசிங்கேவின் மேற்பார்வையில்  243 படைப்பிரிவினரினால் ஒல்லாந்தர் கோட்டையை  அழகு படுத்தும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு  வருகின்றது.

மாவட்டத்தின் புராதன ஒல்லாந்தர் கோட்டையினை அதிகளவிலான சுற்றுலா பயணிகள்  பார்வையிடும் தலமாக காணப்படுகின்றது. இதனால் இக்கோட்டையை அழகு படுத்தி சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக இச் செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

243 படைப்பிரிவினரினால் கல்லடி பாலத்தின் அருகில் காணப்பட்ட பற்றைகளை அகற்றி அழகு படுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.