மட்டக்களப்பு மாவட்ட செயலக அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய வருடாந்த சங்காபிசேகம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) 

மட்டக்களப்பு மாவட்ட செயலக  அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய  வருடாந்த சங்காபிசேக நிகழ்வு இன்று  (15) நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலக கோட்டை வளாகத்தில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய  சங்காபிசேகம் அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ உ.ஜெகதீஸ்வர  குருக்கள் தலையில்  சங்காபிசேக கிரியைகள்  இடம் பெற்றது.

2017 ஆம் ஆண்டு மகா கும்பாபிஷேகத்திற்குரிய  ஏழாவது சங்காபிசேகம்  மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் சங்காபிசேக நிகழ்வு  இடம்பெற்றது.

இவ் நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.