பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக பதவியேற்ற வைத்திய கலாநிதி சஹிலா ராணி இஸ்ஸதீன் அவர்களுக்கு வரவேற்பு.

யூ.கே. காலித்தீன் –
சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் இன்று (11) ஏற்பாடு செய்த வரவேற்பு நிகழ்வானது பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.அஜ்வத் தலைமையில் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

மேற்படி நிகழ்வானது வைத்தியசாலையின் நிறைவேற்று செயலாளர்  எம்.ஐ.எம். சதாத்தினால் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டதோடு,  வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம். அஜ்வத் தலைமை உரையினை நிகழ்த்தினார்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர்கள் வரிசையில் 07வது பணிப்பாளராக முதல் பெண்ணாக வைத்திய கலாநிதி சஹிலா ராணி இஸ்ஸதீன் கடமையேற்றிருப்பதை முன்னிட்டு அவரது பிறந்த மண்ணில் அமைந்துள்ள பல வருடங்கள் வரலாற்றினைக் கொண்ட சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாராட்டு நிகழ்வும் நினைவுச் சின்னமும், பொன்னாடையும் போற்றி கௌரவிக்கப்பட்டார்.
இதன் போது வைத்திய அதிகாரி சனுஸ் காரியப்பர்,  பிராந்திய சுகாதார பணிமனையின் சுகாதார தகவல்கள் பிரிவின் பொறுப்பதிகாரி ஐ.எம். முஜீப், சாய்ந்தமருது முஹையதீன் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் ஏ.ஹிபத்துல் ஹரீம், வைத்தியசாலையின் பிரதி தலைவரும் முபாறக் டெக்ஸ் டையிஸ் உரிமையாளருமான எம்.எஸ்.எம். முபாறக், வைதியசாலையின் ஊழியர்கள் மற்றும் அபிவிருத்திக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வின் இறுதிக் கட்டமாக பணிப்பாளருடன் அபிவிருத்திக் குழுவினர்களுக்கிடையிலான வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான  கலந்துரையாடலுடன் முடிவுற்றது.