மன்னார் பொது வைத்தியசாலையில் நவீனப்படுத்தப்பட்ட மகற்பேறு விடுதிகள் திறப்பு விழா

வாஸ் கூஞ்ஞ 

ஐக்கிய இராச்சிய பிரித்தானியாவில் புலம் பெயர்ந்து வாழும் ஐக்கிய இராச்சிய மன்னார் நலன்புரி நிதி அனுசரனையுடன் 38 மில்லியன் ரூபா செலவில் உயர்தர வசதிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையிலுள்ள மகற்பேறு வார்ட்டுகளை வெளிநாடுகளில் அமைந்துள்ள வார்டுகளைப் போன்று
நவீன முறையில் புணரமைப்பு செய்யப்பட்டு அதற்கான உபகரணங்களையும் வழங்கிய திறப்ப விழா நிகழ்வு வெள்ளிக்கிழமை (09) மன்னார் பொது வைத்தியசாலையில் காலையில் இடம்பெற்றது.

புpரதிப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி எஸ்.யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்திகழ்வில் பிரதம அதிதியாக வடக்கு மாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் கலந்து கொண்டதுடன்

ஐக்கிய இராச்சிய பிரித்தானியாவில் புலம் பெயர்ந்து வாழும் மன்னார் மக்களாகிய மன்னார் நலன்புரி சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பத்திநாதன் ஆகியோர் புதிய வார்ட்டுக்களை திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் புலம் பெயர்ந்து வாழும் மன்னார் நலன்புரி சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் வட மாகாணம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உட்பட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

இநன்போது மகற்பேறு வாட்டில் இருந்த பிள்ளைகளுக்கான பொருட்கள் பொதிகளும் ஆளுநரினாலும்  அதிதிகளினாலும் வழங்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.