எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தில் இருந்து விடை பெற்றார் அதிபர் சத்தியநாதன்.

(எருவில் துசி) கண்ணகி மகா வித்தியாலயத்தின் அதிபராக கடமையாற்றிய அதிபர் சீனித்தம்பி சத்யநாதன் அவர்கள் இன்றைய தினம் தனது சுமார் 36 வருட கல்வி சேவையில் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றியவர். தனது சேவையில் இருந்து இன்று ஓய்வு பெற்றார்.

அவர் ஓய்வு பெற்று செல்லும் இன்றைய தினம் எருவில் பழைய மாணவர் சங்கம் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் என்பன ஏற்பாடு செய்திருந்த மிகவும் கோலாகலமான பாராட்டு நிகழ்வு ஒன்றும் பாடசாலையில் நடைபெற்றது. மேலும் மறைந்த சமூக ஜோதி இளங்குமார் அவர்களின் நினைவாக அவரது மனைவி திருமதி நிவேதனா இளங்குமார் அவர்களுடைய நிதி ஒதுக்கீட்டின் கீழ் பாடசாலையின் முன் நுழைவாயில் சிறப்பாக அமைக்கப்பட்டு இன்றைய தினம் திறப்பு விழாவும் மேற்கொள்ளப்பட்டதும் சிறப்புக்குரியதாகும்.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வலய கல்வி பணிப்பாளர் சி.ஸ்ரீதரன் பாடசாலையினுடைய பிரதி அதிபராக நியமிக்கப்பட்டுள்ள பிரதி அதிபர் சி.தீபதர்சன் அவர்களும் ஏனைய பிரதி அதிபர்கள் மற்றும் ஆலயங்கள் கிராம அபிவிருத்தி சங்கங்கள் கழகங்கள் பொது அமைப்புகள் ஒன்றியங்கள் போன்றவற்றினுடைய பிரமுகர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.