கோறளைப்பற்று வடக்கு வாகரை இடம்பெற்ற பாரம்பரிய பொங்கல் விழா – 2024

 (எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகமும் சமுக அமைப்புகளும் இணைந்து  ஏற்பாடு செய்த பொங்கல் விழா நிகழ்வானது இன்று (07) திகதி கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் எந்திரி ஜீ.அருணன் தலைமையில் வழிபாடு பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல பாரம்பரிய நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலக மற்றும் சமுக மட்ட அமைப்புகளின்  பல வகையான பொங்கல் பானைகள் நிகழ்வை அலங்கரித்ததோடு கயிறிழுத்தல், கோலம் போடுதல் போன்ற பாரம்பரிய விளையாட்டுக்கள் இடம் பெற்றது.

இதன்போது  கிராம மட்ட சமுக அமைப்புகளின் பிரதிநிதிகள், பிரதேச செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் ஏனைய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.