( வி.ரி. சகாதேவராஜா)
றொட்டரி மாவட்டம் 3220 ன் மாவட்ட ஆளுநர் ரொட்டேரியன் ஜெரோம் இராஜேந்திரன் கல்முனைக்கு விஜயம் செய்தார்.
றொட்டரி கழகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டு நேற்று முன்தினம் கழகத்தின் செயற்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
பின்னர் அவர் தலைமையிலான கூட்டம் கல்முனை வெள்ளை தாமரை மண்டபத்தில் நடைபெற்றது.
கழகத்தலைவர் ஏ எல் ஏ. நாசர் தலைமையில் , செயலாளர் கே . குகதாசன் , பொருளாளர் வீ விஜயசாந்தன் உட்பட சகல அங்கத்தவர்களும் பங்குபற்றினர்.
றொட்டரி மாவட்ட செயலாளர் என். றமனா மற்றும் உதவி ஆளுநர் தி .ரகுராம் ஆகியோரும் பங்குபற்றியதுடன், ஆளுநர் கழகத்தின் முன்னேற்றத்திற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.