புகலிடம் நிறுவனத்தின் உட்படுத்தல் கல்வி திட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பான விசேட நிகழ்சித்திட்டம்!!

எஸ்.எஸ்.அமிர்தகழியான்)

புகலிடம் நிறுவனத்தினால் உட்படுத்தல் கல்வி திட்டத்தை அமுல்படுத்துவதற்கான விசேட  நிகழ்சித்திட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில்  செவ்வாயக்கிழமை    இடம் பெற்றது.

புகலிடம் நிறுவனத்தின் அமுலாக்கத்துடன் விசேட தேவைக்குட்பட்ட சிறார்களுக்கான உட்படுத்தல் கல்வி திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான ஆரம்ப நிகழ்ச்சி திட்டம் இன்று இடம் பெற்றது.

புகலிடம் நிறுவனத்தின் பணிப்பாளர் அருட் திரு சாம் சுபேந்திரன் பங்கு பற்றுதலுடன் அரச உயர் அதிகாரிகளுக்கு புகலிடம் நிறுவனத்தினால்  விசேட தேவைக்குரிய சிறார்களிற்கு மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டப்பட்டது.

இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள்  பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பிரதி பணிப்பாளர்கள், வலய கல்வி அதிகாரிகள், சமூக சேவை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனத்தினர் என பலர் கலந்து கொண்டனர்.