சித்திரை வருடத்திற்கு மக்களுக்கு நிவாரணம். ஜனாதிபதி அறிவிப்பு.

Ranil Wickremesinghe, Sri Lanka's prime minister and finance minister, speaks during an interview in Colombo, Sri Lanka, on Wednesday, May 25, 2022. The bankrupt nation will slash its budget expenditure to bare bones and hopes to break even or post a primary surplus of 1% of gross domestic product by 2025, Wickremesinghe said in the interview in his office. Photographer: Buddhika Weerasinghe/Bloomberg

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் ஐந்தாவது புதிய நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரையுடன் மிக எளிமையான முறையில் இன்று (07.02.2024) ஆரம்பமானது. கொள்கை பிரகடன உரையிலேயே ஜனாதிபதி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தனது உரையில் மேலும், வங்குரோத்து நிலை அறிவிக்கப்படும் போது நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு பூச்சியமாக காணப்பட்டது. 2023ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் வெளிநாட்டு கையிருப்பு 4.4 பில்லியன் டொலராக உயர்வடைந்துள்ளது.

வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அத்துடன் வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும். பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை வெளிப்படைத்தன்மையாக அறிவித்துள்ளேன்.

எந்தத் திட்டங்களையும் நான் மறைக்கவில்லை. நாடு மிக மோசமான நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்த போது நான் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

நாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கி கடுமையான தீர்மானங்களை எடுத்து அவற்றை உறுதியாக செயற்படுத்தியுள்ளேன். பொருளாதார நெருக்கடியினால் நடுத்தர மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அவர்களின் உரிமை மற்றும் வரபிரசாதங்கள் மீறப்பட்டுள்ளன. இழக்கப்பட்ட உரிமைகளை கட்டம் கட்டமாக மீளப்பெற்றுக்கொடுப்பேன். குறைந்த வருமானம் பெறும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் 20 கிலோகிராம் அரிசி வழங்கப்படும்.

வற் வரியினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்கிறேன். நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்ய விசேட கவனம் செலுத்தப்படும். வெகுவிரைவில் வரிக் கொள்கை திருத்தம் செய்யப்படும். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு பணிகள் எதிர்வரும் ஜூன் மாதத்துக்குள் நிறைவு செய்யப்படும்.

 

வெளிநாட்டு கடன் மறுசீரமைக்கப்பட்டவுடன் தெரிவு செய்யப்பட்ட அரச முறை கடன்களை செலுத்த வேண்டும், அதற்கு வருடாந்தம் 3 பில்லியன் டொலர்களை ஒதுக்க வேண்டும். கல்வி மற்றும் சுகாதார சேவைத்துறையின் சட்டங்கள் நடைமுறைக்கு சாத்தியமான வகையில் திருத்தம் செய்யப்படும்.

பிளவுபடாத வெளிவிவகார கொள்கை விரிவுபடுத்தப்படும். சீனா, இந்தோனேசியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை கைச்சாத்திட எதிர்பார்த்துள்ளோம்.

அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் நிலையான முன்னேற்றத்தை அடையலாம். பொருளாதார மீட்சிக்கான செயற்திட்ட பேச்சுவார்த்தைக்கு ஒன்றிணைய அனைவரும் தயாரெனில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகளை நாட்டுக்கு அழைக்கத் தயார் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.