ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ‘சத்யக்சணய’ உண்மையைத்தேடி எனும் நிகழ்ச்சி ஜனாதிபதி செயலகத்தின் உலக உணவுத் திட்டம் மற்றும் உலக உணவுத் திட்டம் என்பவற்றுடன் இணைந்து மாதாந்தம் ரூபவாஹினி கூட்டுத்தாபன தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப் பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கிராமத்திலுள்ள திருமதி பத்மராஜா விமலாவதி என்பவரின் இல்லத்தில் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. ஜஸ்டினா .முரளீதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வு, விடயத்திற்கு பொறுப்பான ஜனாதிபதி ஆலோசகர் வைத்தியர் சுரேன் வத்தகொட, விவசாய அமைச்சின் உணவு மற்றும் ஊட்டச்சத்துக்கு பொறுப்பான உதவி மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர், உலக உணவுத் திட்ட வைத்திய அதிகாரி, ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.
அத்துடன் மாவட்ட மற்றும் பிரதேச செயலகம், விவசாயத் திணைக்களம் என்பவற்றின் உத்தியோகத்தர்கள், ரூபவாஹினி கூட்டுத்தாபன சிரேஷ்ட ஊடகவியலாளர், கிராம அபிவிருத்தி சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், பிரதேச விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.