( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள மினுக்கன் கிராமத்திற்கான உத்தியோக பூர்வமான கள விஜயத்தினை மேற்கொண்டதுடன் மக்களின் தேவை பாடுகளையும் கேட்டறிந்தார்
இந்த நிகழ்வானது மினுக்கன் கிராம சேவையாளர் திரு சிறிஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (4) காலை 10.45 மணியளவில் கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது
-அங்கு சென்ற அரச அதிபர் ஜே.எஸ்.வி. நிறுவனம் வழங்கும் பெண் தலைமைத்துவத்தை கொண்ட குடும்பங்களுக்கான கோழி வளர்ப்பு தொடர்பான சாதக பாதக பலன்களை கேட்டறிந்தார்
அத்துடன் புதிதாக மன்னார் மாவட்டத்திற்கு அரசாங்க அதிபராக பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத சூழலில் இன்றைய தினம் கிராமத்து மக்களால் அரசாங்க அதிபருக்கு பொன்னடை போர்த்திஇ நினைவுச் சின்னம் வழங்கிஇ மதிப்பளித்தனர்
இந்த நிகழ்வில் மன்னார் மேலதிக அரசாங்க அதிபர்(காணி) மாணிக்கவாசகர் சிறிஸ்கந்தகுமார்இ மடு மற்றும் மாந்தை மேற்கு பிதேச செயலாளர்கள்இ பதவி நிலை உத்தியோகத்தர்கள்இவனவளப் பிரிவின் பொறுப்பாளர்கள் ஜே.எஸ்.விஇ. நிறுவனத்தினர் பெண்கள் அமைப்பினர் பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்