கனகராசா சரவணன்)
வெலிகந்தை கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையே இன்று ஞாயிற்றுக்கிழமை (04) மாலையில் ஏற்பட்ட மோதலில் இராணுவ வீரர் ஒருவர் உட்பட 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட் டுள்ளதுடன் 36 பேரை கைது செய்துள்ளதாகவும் இருவர் தப்பி ஓடியுள்ளதாக வெலிகந்தை பொலிசார் தெரிவித்தனர்.
கந்தந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கிடையே உள்ள இரு குழுக்கழுக்கிடையே சம்பவதினமான இன்று மாலை 4.30 மணியளவில் மோல் ஏற்பட்டதையடுத்து அதனை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முற்பட்ட ஒரு இராணு சிப்பாமு; 8 கைதிகளுமாக 9 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து 36 பேரை பொலிசார் கைது செய்ததுடன் இந்த மோதல் சம்பவத்தினை பயன்படுத்தி இருவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாகவும் அவர்களை பொலிசாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடும் நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.