வவுணதீவு கொத்தியாபுலை குறுக்கே உடைக்கப்பட்ட வீதியை புரனமைத்துதருமாறு மக்கள் கோரிக்கை —

கனகராசா சரவணன்)

மட்டக்களப்பு  மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொத்தியாப்புலை பிரதேசத்திற்கான வட்டுவான் வீதி கடந்த மழை வெள்ளத்தினால் குறுக்கே உடைந்துள்ளதையடுத்து அந்த பகுதியால் மக்கள் பிரயாணிக்க முடியாது  பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனனர்.

வவுணதீவு தாண்டியடி பிரதான வீதியில் இருந்து கொத்தியாபுலை பிரதேசத்துக்குச் செல்லும் வட்டுவான் வீதி கடந்த சிலவாரங்களுக்கு முன்னர் பெய்த கடும் மழை வெள்ளத்தினால்; வீதியை குறுக்கே உடைத்துக் கொண்டு வெள்ள நீர் வடிந்தேடியுள்ளது.

இதனையடுத்து குறித்த வீதியில் குளம் போல் வெள்ள நீர் தங்கி நிற்பதுடன் அந்த பிரதேசத்துக்கு கால்நடையாகவே வாகனங்களிலே மோட்டர் சைக்கில்களிலே பிரயாணிக்க முடியாது வீதியை விட்டு விலகி வயல் நிலப்பரப்பால் சென்றே வீதிக்கு மீண்டும் ஏறி பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் பிரயாணிக்க வேண்டியுள்ளது

குறித்த வீதி குறிக்கே உடைந்துள்ளது தொடர்பாக பிரதேச செயலகம், பிரேத சபை உட்பட சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அரசியல்வாதிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தும் இதுவரை வீதியை புனரமைக்கப்படவில்லை என பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

எனவே இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி இந்த வீதியை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.